வினைமுற்று* "புவனா பாட்டு எழுதினாள்". இதில் 'எழுதினாள்' என்னும் சொல் தொழிலைக் குறிப்பதால் இது வினைச்சொல் ஆகும். இதில் எழுதினாள் என்பது வினை முடிந்து நிற்கும் சொல். எனவே இது வினைமுற்று அல்லது முற்றுவினை எனப்படும்.
*வினையெச்சமும் பெயரெச்சமும்*. வினையெச்சம் . "கண்ணன் பாட்டு எழுதி முடித்தான்". இதில் எழுதி முடித்தான் என்னும் தொடரில் எழுதி என்ற வினை முடித்தான் என்னும் மற்றொரு வினையைக் கொண்டு முடிகிறது. ஆகையால் இது வினையெச்சம் எனப்படும். வினை எச்சம் வினையைக் கொண்டு முடியும். எடுத்துக்காட்டு: நடந்து, பாடி. . *பெயரெச்சம்*. அவன் எழுதிய பாட்டு என்னும் தொடரில் எழுதிய என்ற வினை பாட்டு என்னும் பெயரைக்கொண்டு முடிவதால் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் பெயரைக் கொண்டு முடியும். எடுத்துக்காட்டு: நடந்த, பறந்த. .
*விளக்க முறை*. . மாணவர்களே தமிழில் வினை என்றால் என்ன?. வினை என்பது நாம் செய்யும் தொழிலை குறைக்கும் தமிழ் சொல் ஆகும். எடுத்துக்காட்டாக நடக்கிறேன் நடந்தேன் நடப்பேன் என்பனவாகும். இந்த எடுத்துக்காட்டுகளில் நட என்பது ஒரு வினை ஆகும். நான் மேலே கூறிய எடுத்துக்காட்டும் நட என்பதாகும்
அவை மூன்றிலும் நடக்கிறேன் என்பது நிகழ்காலத்தையும் நடந்தேன் என்பது இறந்த காலத்தையும் நடப்பேன் என்பது எதிர் காலத்தையும் காட்டுகிறது.
இவற்றில் உங்களுக்கு புரிந்தது என்ன? வினைச்சொல் காலம் காட்டும் தன்மை உடையது.அவை நிகழ் காலம் எதிர் காலம் இறந்த காலம் இவற்றை காட்டுகிறது. சரி நாம் இங்கு வினைச்சொல்லின் பிரிவுகளைப் பார்ப்போம்.
*வினைமுற்று*. .வினைமுற்று என்பது நாம் செய்யும் செயல் முற்றுப் பெறாமல் அதனை வினைமுற்று என்பர். எடுத்துக்காட்டாக, நான் நடந்து பள்ளிக்குச் சென்றேன். . என்ற சொற்றொடரில் நீங்கள் அனைவரும் காலையில் பள்ளிக்கு வந்தது போன்று ஒரு மாணவன் நடந்து பள்ளிக்குச் சென்றான் என்பது அந்த வினை. எனவே இந்த சொற்றொடரில் நடந்து என்பது ஒரு வினையாகவும், சென்றான் என்பது, அந்த வினை முற்று பெற்றதையும் குறிக்கிறது. எனவே இது ஒரு வினைமுற்று ஆகும்.
*வினையெச்சம்*. ஒரு செயல் முடிவு பெறாமல் எஞ்சி நிற்கும் ஆனால் அதனை வினையெச்சம்,அதாவது நீங்கள் அனைவரும் சினிமா படம் பார்த்திருப்பீர்கள் அதன் இறுதியில் ஒரு முடிவு இல்லாமல் அமையப் பெறுவது போன்று வினையெச்சம் அமையும்.எடுத்துக்காட்டாக நடந்து கண்டு நின்று போன்ற இறுதியில் "உ"வைத்து முடியும் சொற்கள் அனைத்தும் வினை எச்சம் ஆகும்.
No comments:
Post a Comment